பக்கம்:நாடகக் கலை 2.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

'யாளுே அரசன்; யானே கள்வன்,

மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது; கெடுக என்ஞயுள்'

எனத் துடித்து வீழ்ந்தான்; அவன் உடல் சாய்ந்தது, உயிர் பிரிந்தது. நீதி வழுவியதால் வளைந்த செங் கோலைத் தன் உயிரைக் கொடுத்து நிமிர்த்தின்ை பாண்டியன். எவ்வளவு உயர்ந்த பா த் தி ர ம் பாண்டியன்! தமிழினத்திற்கு எத்தனை பெருமை!

அவ்வாறு நீதிக்காக ஆவி நீத்த நெடுஞ் செழியனை, தன் காதற் கணவனைக் கொன்ற பாண்டி யனை, கண்ணகியின் திருவாயாலேயே வாழ்த்துக் காதையில் தென்னவன் தீதிலன்" என்று சொல்ல வைக்கிருர் இளங்கோவடிகள். இந்தக் கருணை உள்ள மல்லவா நாடகாசிரியனுக்கு வேண்டும்!

கம்பன் காட்டும் கருணை

அடுத்தபடியாக இராமாயணத்தை எடுத்துக் கொள்வோம். அதைப் போன்ற ஒரு அழியாத நாடகக் காப்பியத்தை இனி நாம் பெற முடியுமா? எவ்வளவு அருமையான பாத்திரப் படைப்புக்கள்! தந்தையின் சொல்லுக்காகப் பதின்ைகு ஆண்டுகள் வனவாசம் செய்த ஒரு தனையன்; தாய் தனக்குத் தேடிக் கொடுத்த அரசைத் தமையனுக்கே கொடுக்க முன் வந்த தம்பி பரதன்; எத்தனை விதமான மன நிலைகளைப் பார்க்கிருேம்.

கொடியவளாகிய இவளது புதல்வன் பரதன் எனக்கு ஈமச் சடங்குகளும் செய்யத் தக்கவன் அல்லன்' என்று தயரதன் நாவால் சொல்லும் அளவுக்கு அவன் மனத்தை மாசுபடுத்தி விட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/132&oldid=1322503" இலிருந்து மீள்விக்கப்பட்டது