பக்கம்:நாடகக் கலை 2.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை

தமிழ் நாடகக் கலைக்கு சரியான சரித்திரம் இல்லை யென்ற நல்நோக்கத்துடன், தனது அனுபவத்தையும், தனக்குத் கிடைத்த விபரங்களையும் வைத்துக்கொண்டு ஒரு சிறந்த நாடக வரலாற்றை தமிழ் மக்களுக்குத் தருகிருர்; நாடக அனுபவம் நிறைந்த கலைஞர் அவ்வை திரு. டி. கே. சண்முகம் அவர்கள்.

அத்துடன், நடிப்புப் பயிற்சி பெற்று சிறந்த நடிகளுகத் திகழ்வதற்கு சிறுவர் நாடகக் குழுக்கள் (பாய்ஸ் கம்பெனிகள்) மறைந்துபோன இக்காலத்தில் நடிகர் பஞ்சம் தமிழ் நாட்டில் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சி நடிப்புக் கலையைப்பற்றியும், விரிவாக இந் நூலில் குறிப்பிட்டிருப்பதோடு நாடகக் கலை பாமர மக்களுக்கும் பயன்படக்கூடிய முறையில் அமைய வேண்டும்; ஆல்ை, பக்குவமாகப் பயன்படுத்தவும் தெரியவேண்டும் என்று தெளிவாகவும் எடுத்துக் கூறுகிருர்,

இது போன்ற அனுபவம் நிறைந்த பெரியார் களின் நூல்களையெல்லாம், வெளியிட வேண்டுமென்று

எண்ணியபோது இந்த நூலின் உரிமையை சங்கர தாஸ் சுவாமிகள் நினைவு மன்றத்திற்கே கொடுத் துதவிய அவ்வை டி. கே. சண்முகம் அவர்களுக்கு எங்கள் நன்றி உரித்தாகுக.

பல அலுவல்களுக்கிடையே இந்த நூலுக்கு முன்னுரை எழுதிக் கொடுத்த மதிப்பிற்குரிய சிலம்புச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/14&oldid=1322369" இலிருந்து மீள்விக்கப்பட்டது