பக்கம்:நாடகக் கலை 2.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

பழக்கத்தை நடைமுறையில் கொண்டு வருவதற்கு பொதுமக்கள் ஆதரவும் அரசாங்க ஆதரவும் இன்னும் ஏற்படவேண்டும்.

வயதான பெரியவர்களுக்கு நன்மை தீமைகளைப் பகுத்தறியும் அனுபவம் இருப்பதால் அவர்கள் எந்த நாடகத்தையும் பார்க்கலாம். அதனல் பெரிய பிழை எதுவும் நேர்ந்துவிடாது. ஆனால், சிறுவர்கள், இளைஞர்கள், உலக அனுபவம் பெருதவர்கள்; உணர்ச்சிவசப்பட்டு எதையும் ஏற்றுக் கொள்ளும் உள்ளம் படைத்தவர்கள். அதனுல் நல்ல நாடகம் எனத் தேர்ந்தெடுத்தவற்றைத்தான் சிறுவர்கள் பார்க்க வேண்டும்.

ஓட்டல்களில் போய் கண்டதையெல்லாம் வாங்கித் தின்ருல் உடம்புக்கு நோய் வந்துவிடுகிறதல்லவா? அதே போன்று நாட்டிலே நடைபெறும் எல்லா நாடகங்களையும் பார்ப்பதால் இளைஞர்களின் உள்ள மும் நோயுற்றதாகிவிடும்.

வகுப்புகளுக்குத் தக்கபடி, மாணவர்களின் வளர்ச் சிக்குத் தக்கபடி படிக்கும் புத்தகங்களை மாற்றிக் கொண்டே போகிருேம் அல்லவா? அதே போன்று பருவத்திற்குத் தக்கபடி மாணவர்கள் பார்க்கும் நாட கங்களின் படிப்பினையும் மாறித்தானே இருக்க வேண்டும்? பருவத்திற்கேற்ற கருத்துடைய நாடகங் களைத்தானே அவர்கள் பார்க்கவேண்டும்.

சிறுவர்களுக்குரிய நாடகம் எது?

சிறுவர்களின் உள்ளம் தூய்மையானது; பரிசுத்த மானது; பிஞ்சு உள்ளம். பச்சை மரத்தில் ஆணியை அடித்தால் எப்படி எளிதாக உள்ளே நுழைந்து விடுகிறதோ, அதேபோல் தூய்மையான இளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/146&oldid=1322518" இலிருந்து மீள்விக்கப்பட்டது