பக்கம்:நாடகக் கலை 2.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

'கியாஸ்' லைட்டுகளை வைத்துக்கொண்டு நாடகங்கள் நடைபெற்ற போதும் நான் நடித்தேன்; இன்று கண்ணைப் பறிக்கும் மின்சார வெளிச்சத்திலேயும் நடித்து வருகிறேன்.

எவ்வளவு பெரிய மாறுதல்கள்!...எவ்வளவு அருமையான சுவை மிகுந்த வரலாறு இது!! எண்ணிப் பாருங்கள்!

இந்த வரலாற்றை நாம் ஆராய வேண்டியது அவசியமல்லவா?

தமிழ் நாடகக் கலையின் இன்றைய வளர்ச்சியிலே எத்தனையோ பெரியவர்கள் பங்கு பெற்றிருக்கிருர்கள். நாடக இலக்கியம் என்பது படித்து மட்டும் வளரும் இலக்கியமல்ல; கண்களால் பார்த்தும் மகிழக்கூடிய இலக்கியமாகும். எனவே, அச்சிலே வெளிவந்துள்ள நாடக நூல்களின் அளவைக் கொண்டு மட்டும் அதன் வளர்ச்சியைக் கணக்கிட முடியாது. பரம்பரை பரம்பரையாக அரங்கிலே ஆடிவந்துள்ள நாடகங்களின் வளர்ச்சியையும் அளவுகோலாகக்கொண்டு பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும். இந்தக் கண்ணுேட்டத் தோடுதான் தமிழ் நாடக வரலாற்றை நாம் ஆராய வேண்டும்.

நாடகம் என்றால் என்ன

நாடகம் கலைக்கரசு; நாட்டின் நாகரீகக் கண்ணாடி; பாமரர்களின் பல்கலைக் கழகம். உணர்ச்சியைத் தூண்டி விட்டு, உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அன்பையும் அறிவையும் தூய்மையையும் வெளிப்படுத்தி மக்களைப் பண்படுத்தும் மகத்தான கலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/18&oldid=1540096" இலிருந்து மீள்விக்கப்பட்டது