பக்கம்:நாடகக் கலை 2.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

லாம் ஆராய்ந்து 'நாடகத் தமிழ்' என்னும் ஒரு சிறந்த நூலை வெளியிட்டிருக்கிறார். இந்த நூலின் பிற்பகுதி யில் தொழில் முறை நாடக சபைகளைப்பற்றிய செய்தி கள் முழுதும் நன்கு ஆராய்ந்து சொல்லப்படவில்லை யென்றாலும் நாடகத் தமிழைப் பற்றிய ஆராய்ச்சி நல்ல முறையில் செய்யப்பட்டிருக்கிறது.

ஆக, மறைந்தும் அழிந்தும் போன பழைய நூல்கள் போக, இப்போது நமது காலத்தில் இருந்து வரும் நாடக இலக்கண நூல்கள் நாடகவியல், மதங்க சூளாமணி, சாகுந்தல ஆராய்ச்சி, நாடகத் தமிழ் ஆகிய நான்கு நூல்களாகும்.

இப்போது நான் பழைய நூல்கள் எனக் குறிப் பிட்டவை யெல்லாம் நாடக இலக்கண நூல்களே தவிர ஒன்றுகூட இலக்கியம் அன்று.

காட்சி நூல்கள்

நான் முன்பு குறிப்பிட்டவாறு நாடக இலக்கியங் கள் படித்து மாத்திரம் மகிழும் இலக்கியங்கள் அல்ல; மேடையில் பார்த்து மகிழும் இலக்கியங்கள். படித்து மகிழும் இலக்கியத்தைக் கேள்வி நூலென்றும், பார்த்து மகிழும் இலக்கியத்தைக் காட்சி நூலென்றும் குறிப்பிடலாம். பார்த்து மகிழும் நாடகங்கள் இலக்கிய வடிவிலே — நூல் வடிவிலே இருந்தாலும் கூட அவற்றைக் 'காட்சி நூற்கள்' என்றே அறிஞர்கள் சொல்லுவார்கள்.

பழைய நூல்களில் காட்சி நூல் என்று சொல் வதற்கு நூல் வடிவில் நாடகம் எதுவும் நமக்குக் கிடைக்கா விட்டாலும், தமிழ் நாட்டில் ஆயிரக் கணக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/29&oldid=1540130" இலிருந்து மீள்விக்கப்பட்டது