பக்கம்:நாடகக் கலை 2.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கான ஆண்டுகளாக நாடகங்கள் தொடர்ந்து நடை பெற்று வந்திருக்கின்றன என்பதற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.

நாடகங்களுக்கு மானியம்

இராஜராஜ சோழன் இராஜேந்திர சோழன் முதலிய மன்னர்கள் அந்த நாளில் நாடகம் நடிப் போர்க்கு மானியங்கள் கொடுத்திருக்கிறார்கள். அதற் கான குறிப்புகள் கல்வெட்டுகளில் காணப் பெறுகின் றன. இராஜ ராஜ சோழனின் வெற்றியைக் குறிப் பிடும் 'இராஜ ராஜ விஜயம்' என்னும் நாடகம் அவன் வாழ்ந்த காலத்திலேயே தஞ்சாவூர்க் கோயிலில் நடிக்கப் பெற்றதாகக் கல் வெட்டுகளில் பொறிக்கப் பட்டுள்ளது.

நகரங்களிலும், சிற்றூர்களிலும் மன்னர் அரண்மனைகளிலும் ஆலயங்களிலும் தற்காலிகமாக மேடைகள் அமைக்கப்பட்டுத் திறந்தவெளிகளில் நாடகங்கள் பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன. இத்தகைய தெருக் கூத்துக்கள் இன்னும் தமிழகத்தின் சில சிற்றூர்களிலே நடை பெற்று வருகின்றன.

ஆலயங்கள் வளர்த்த அருங்கலை

சிற்பம், சித்திரம், இசை, நாட்டியம், நாடகம் ஆகிய நற்கலைகள் அனைத்தையும் ஆதரித்துப் போற்றி வளர்த்து வந்த பெருமை நம் நாட்டின் ஆல யங்களுக்கே தனி உரிமை. அந்த நாளில் கோயில் பெருவிழாத் தான் நகரத்தின் பெரிய திருவிழா. நாட்டின் நற்கலைஞர்களெல்லாம் 'கோயிலிலேதான் கூடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/30&oldid=1540131" இலிருந்து மீள்விக்கப்பட்டது