பக்கம்:நாடகக் கலை 2.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

வார்கள். இயலும், இசையும், கூத்தும் அங்கேதான் நடைபெறும். அன்பு நெறியும், அறத்தின் சிறப்பும் அருளின் வலிமையும் நாடகங்களிலே நடமாடின. ஆலயப் பெருவெளிகளிலும் ஆலயத்தை யடுத்த மதிற்புறங்களிலும் அரங்குகள் அமைக்கப் பெற்றன. அங்கே முத்தமிழ்க் கலைஞர்கள் கலை வளர்த்தார்கள். இந்த உண்மையெல்லாம் இன்று நமக்குப் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன. வேத்தியல், பொதுவியல், என நாடகங்களை இரு வகைப்படுத்தி, வேத்தியல் அரசர்கள், பிரபுக்களுக்கென்றும், பொதுவியல் மக்களுக்கென்றும் ஆடப்பட்டு வந்த தாகத் தெரிகிறது.

அனைத்துமே பாடல்கள்

நூல் வடிவில் இதுவரை நமக்குக் கிடைத்திருக்கும் நாடகங்கள் எல்லாம் ஏறக்குறைய முந்நூறு ஆண்டு களுக்குப் பிற்பட்டவையென்றே சொல்ல வேண்டும். அந்த நாடகங்கள் யாவும் பாடல்களாக அமைந்திருக் கின்றனவே தவிர உரை நாடகம் ஒன்றுகூட இல்லை. பழங்காலத் தமிழ் நாடகங்கள் யாவும் பாடல்களாகவே இருந்திருக்க வேண்டும் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது. ஹரிச்சந்திரா, இராமாயணம், மக பாரதம், முதலிய நாடகங்கள் அனைத்தும் பாடல் களாகவே இருக்கின்றன.

பழங்கால நாடக வசனங்களைப் பெரும்பாலும் கட்டியக்காரன் வந்து பொது வசனமாகப் பேசுவான். அந்த வசனம் நாடகத்தின் ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் தொடர்பு ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

நா.2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/31&oldid=1540132" இலிருந்து மீள்விக்கப்பட்டது