பக்கம்:நாடகக் கலை 2.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாடக மேடை சீர்குலைந்திருந்த அந்த நாளிலே, இப்படிக் குரல் கொடுத்தார் ஒரு பெரியார். அந்தப் பெரியார்தாம் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். அந்த நாளில் 'சுவாமிகள்' என்றாலே போதும்; அந்தச் சொல் அவர் ஒரு வரைத்தான் குறிக்கும். அவருடைய நாடக அமைப்புத் திறன்; அந்த அமைப்பிலே காணப்படும் நுணுக்கம். நாடகப் போக்கிலே நாம் காணும் அழகு; நாடக் பாத்திரங்களின் வாயிலாகப் பாடல்களிலும் உரையாடல்களிலும் அவர் வெளியிட்ட கருத்துக்கள்; அந்தக்' கருத்துக்களால் நாடகம் பார்ப்பவர்கள் அடைந்த பயன், இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும் போது சுவாமிகளின் நாடக நல்லிசைப் புலமை நமக்கு நன்றாகத் தெரிகிறது.

சுவாமிகள் தந்த நாடகச் செல்வம்

சுவாமிகள் சுமார் நாற்பது நாடகங்கள் எழுதி யிருக்கிறார். நாடகத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட கதைகள் பெரும்பாலும் அம்மானைப் பாடல்களாக நம்முடைய தாய்மார்கள் சுவையோடு படித்து வந்த பழங்கதைகள் தாம்.

அபிமன்யு சுந்தரி, பவளக்கொடி, சீமந்தனி, சதியது சூயா, பிரகலாதன், சிறுத்தொண்டர், வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி, சுலோசனு சதி இப்படி எல்லாம் நமக்குத் தெரிந்த நாடகங்கள். இவைகளைத் தவிர வடமொழி நாடகமாகிய மிருச்சகடியையும், ஷேக்ஸ்பியரின் ரோமியோஜூலியத், சிம்பலைன் ஆகிய நாடகங்களையும், மணிமேகலை, பிரபுலிங்க லீலை ஆகிய தமிழ்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/39&oldid=1540574" இலிருந்து மீள்விக்கப்பட்டது