பக்கம்:நாடகக் கலை 2.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

விஜயம்,சபரிமலை ஐயப்பன், சக்தி லீலா, ஏசுநாதர், பக்த ராமதாஸ் முதலிய நாடகங்களை மிகச் சிறப்பாக நடத்திப் புகழ் பெற்றார்.

பி. எஸ். கோவிந்தன்

புளியமாநகர் திரு.சுப்பா ரெட்டியார் அவர்களும் ஒரு பாலர் சபையை நடத்தி வந்தார். இச் சபையினர் இலங்கை, மலேயா போன்ற வெளிநாடுகளுக்கும் சென்று புகழ் பெற்றனர். நெடுங்காலம் இயங்கி வந்த இந்தக் குழுவில் தோன்றிய நடிகர்களில் திரு. பி. எஸ். கோவிந்தன் குறிப்பிடத்தக்கவர்.

பாலர் சபைகள்

மற்றும் பல பாலர் சபைகள் இடையிடையே தோன்றி மறைந்திருக்கின்றன. இவற்றில் குறிப்பிடத் தக்கவை பட்டினத்தார் நாடகத்தை மேடைக்குக் கொண்டுவந்த திருச்சி பால பாரத சபை. மற்றொன்று பிரசித்தி பெற்ற என். வி. சண்முகம் பட்டணம் பொடி நிறுவனத்தார் தோற்றுவித்த பாலர் சபை. இன்னொன்று எட்டயபுரம் இளையராஜா காசி பாண்டியன் அவர்கள் நடத்திய சிறுவர் நாடகக் குழு.

காசி விசுவநாத பாண்டியன்

எட்டையபுரம் காசி பாண்டியன் அவர்கள் நுண் கலைகளில் மிகுந்த ஆர்வமுடையவர். அவருடைய நாடகக் குழுவுக்குத் தேவைப்பட்ட காட்சிகளையெல்லாம் அவரே எழுதித்தயாரிப்பார். நாடகத்தை எழுதுவதிலும் திறமை வாய்ந்தவர். இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாளன் என்னும் பெயரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/56&oldid=1540605" இலிருந்து மீள்விக்கப்பட்டது