பக்கம்:நாடகக் கலை 2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

ளாதாரப் பேரறிஞர் திரு.ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்தியாவிலேயே நாடகக்கலை வளர்ச்சிக்காக நடந்த முதல் மா நாடு இது. இந்த மாநாட்டை நாங்களே முன்னின்று நடத்தினோம். நகைச்சுவை நடிகர் திரு.டி.என். சிவதாணு மாநாட்டின் செயலாளர். இதைத் தொடர்ந்து, கரந்தையிலும் சென்னையிலும் நாடகக்கலை மாநாடுகள் நடைபெற்றன. இம்மாநாடுகளில் நாடகக்கலை வளர்ச்சிக்குரிய வழிவகைகளைப் பற்றி அறிஞர்கள் ஆய்வுரை செய்தார்கள்.

துன்பியல் நாடகங்கள்

1944-ல் திரு.கு. சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய அந்தமான் கைதியும், திரு. ப. நீலகண்டன் எழுதிய முள்ளில் ரோஜாவும் எங்கள் நாடக சபையில் நடைபெற்றன. இவ்விரு நாடகங்களும் சிறந்த மறுமலர்ச்சி நாடகங்கள் எனப் பத்திரிகையாளரால் பாராட்டப் பெற்றன. அந்தமான் கைதியும், முள்ளில் ரோஜாவும் துன்பியல் நாடகங்களாகும்.

மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபையின் மறைவுக்குப் பின் நாடகாசிரியர் திரு. டி. பி. பொன்னுசாமிப் பிள்ளை அவர்கள் ஸ்ரீமங்கள பாலகான சபா என்னும் பெயரால் ஒரு நாடக சபையைத் தோற்றுவித்தார். இந்தச் சபையார் இழந்த காதல், விமலா அல்லது விதவையின் கண்ணீர் என்னும் இரு துன்பியல் சமுதாய நாடகங்களை அரங்கேற்றினார்கள். இந்த நாடக சபையிலே தோன்றியவர்தாம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் ஸ்ரீ மங்கள பாலகான சபையைத்தான் கலைவாணர் என்.எஸ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/59&oldid=1540615" இலிருந்து மீள்விக்கப்பட்டது