பக்கம்:நாடகக் கலை 2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

போட்டி போட்டுக்கொண்டு வளர்ச்சி பெற்றது என்றே சொல்ல வேண்டும்.

சினிமா வளர்ச்சியால் கலை அம்சத்தைப் பொறுத்த வரையில் நாடக வளர்ச்சி குன்றிவிடவில்லை. ஆனால் மற்றொரு தொல்லை ஏற்பட்டது. நாடகக் கொட்டகை களையெல்லாம் சினிமாக் கொட்டகைகளாக மாற்றி விட்டார்கள். நிரந்தரமான வருவாய்க்காக இப்படிச் செய்துவிட்டதால் நாடகம் நடிப்போருக்குக் கொட்டகை கிடைப்பது அரிதாகி விட்டது. சினிமாவுக்குக் கொட்டகையைக் கொடுக்க வேண்டிய அவசியம் நேரும்போது அதற்கு வாடகை பல மடங்கு அதிகமாகிவிடுகிறது. இன்று வேகமாக வளர்ந்து வரும் தமிழ் நாடகமேடை வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது நாடகக் கொட்டகைகள் இல்லாத குறைதான். இதன் விளைவாகத்தான் நிரந்தரமாக நடைபெற்று வந்த எங்கள் குழுவைப் போன்ற பல நாடகச் சபைகள் மூடு விழாக் கொண்டாட நேர்ந்தன.

நாடகக் கழக உதயம்

1950-ல் சென்னையில் நாடகக் கழகம் என்ற பெயரால் ஒரு நிறுவனம் தோன்றியது. இந்தக் கழகத்தில் நடிகர்கள், நாடகாசிரியர்கள், நாடகத் தொழிலாளர்கள், அமெச்சூர்கள், ரசிகர்கள் எல்லோரும் அங்கம் வகித்தார்கள். அரசாங்கத்தார் விதித்த கேளிக்கை வரியால் நாடக சபைகள் நடைபெறுவது மிகவும் கஷ்டமாகவிருந்தது. இதற்காக நாங்கள் தனியே விடுத்த வேண்டுகோளெல்லாம் பயனற்றுப் போய்விட்டன. நாடகக்கழகத்திற்கு முதல் இரண்டாண்டுகள் நான் தலைவராக இருந்தேன். அப்போது ஸ்தாபன ரீதியாக

நா.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/63&oldid=1540640" இலிருந்து மீள்விக்கப்பட்டது