பக்கம்:நாடகக் கலை 2.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

எங்கள் குறைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச் சொன்னோம். பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் தலைமையில் தூதுக் குழுவொன்று அமைச்சர்களை நேரில் கண்டு நாடகம் நடத்துவோரின் குறைகளை எடுத்துரைத்தது.

நாடக அரங்குகள் இல்லாத குறையைப் போக்கத் திறந்தவெளி அரங்குகள் ஏற்படுத்தி நாடகக் கழகத்தின் சார்பில், தொழில் முறை நாடக சபைகளும், அமெச்சூர் சபைகளும் கூட்டாக இரு பெருங்கலை விழாக்களை நடத்தின. அதில், ஐயாயிரம் நாற்காலிகள் போட்டு இரண்டு வகுப்பாகப் பிரித்து முதல் வகுப்பு எட்டணாவாகவும், இரண்டாவது வகுப்பு நான்கணாவாகவும் குறைந்த கட்டணம் வைத்து நாடகங்களை நடத்தி மத்திய சர்க்கார் அமைச்சர்களையும் அழைத்து வந்து காட்டினோம். நாடகக் கலையில் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை அரசாங்கம் உணரும்படிச் செய்தோம்.

கேளிக்கை வரிவிலக்கு

இதன் பயனாக 1951-ல் சென்னை அரசாங்கம் நாடகத்திற்குக் கேளிக்கை வரியிலிருந்து விலக்களித்தது. அதன் பிறகு நாடெங்கும் திறந்த வெளி அரங்குகள் தற்காலிகமாக அமைத்து பெரிய அளவில் நாடகங்களை நடிக்கத் தொடங்கினார்கள். கொட்டகையில் அதிகமாகப் போனால் 2000 பேர்ளுக்கு மேல் பார்க்க முடியாதிருந்த நிலைமை மாறி 5,000, 10,000க் கணக்கான மக்கள் பார்க்கும் முறையில் திறந்த வெளி அரங்குகளில் நாடகங்கள் நடைபெற்றன.

தமிழ் நாட்டில் நடைபெறும் பொருட்காட்சிகளில் எல்லாம் பெரிய கலையரங்குகள் ஏற்படுத்தி நாடக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/64&oldid=1540641" இலிருந்து மீள்விக்கப்பட்டது