பக்கம்:நாடகக் கலை 2.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

சபையைச் சேர்ந்த என். விஸ்வநாதய்யர், ராஜசேகரன், ராணா பிரதாப சிம்மன் முதலிய பல நாடகங்கள் எழுதி நடித்திருக்கிறார். திரு.தேவன் அவர்களின் கல்யாணி, மைதிலி. துப்பறியும் சாம்பு முதலிய பல நகைச் சுவை நாடகங்கள் நடிக்கப் பெற்றுள்ளன.

சேவா ஸ்டேஜ்; நாடகக் கல்வி நிலையம்

திரு எஸ்.வி.சகஸ்ரநாமம் சேவா ஸ்டேஜ் என்னும் ஒரு ஸ்தாபனத்தை நிறுவி சிறந்த முறையில் நாடகங்கள் நடித்து வருகிறார். என். வி. ராஜாமணி எழுதிய கண்கள், இருளும் ஒளியும், தி. ஜானகிராமன் எழுதிய நாலு வேலி நிலம், பி. எஸ். இராமையா எழுதிய மல்லியம் மங்களம், குஹன் எழுதிய புகழ் வழி, கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மோகினித் தீவு, பாரதியாரின் பாஞ்சாலி சபதம் என்னும் கவிதை நாடகம் ஆகிய இவற்றை சேவா ஸ்டேஜ் சர்வீசார் மிக நல்ல முறை யில் புதிய விதமான காட்சி அமைப்புகளோடு நடத்தி வருகிறார்கள்.

1957-இல் சேவா ஸ்டேஜ், நாடகக் கல்வி நிலையம் ஒன்று நிறுவி, பாடத் திட்டங்கள் வகுத்து, மூன்று மாத காலம் இளைஞர்களுக்கு நாடகக் கல்வியளித்தது. இதற்காகத் தமிழ் ராஜ்ய சங்கீத நாடகச் சங்கம் இந் நிலையத்திற்கு ரூ.3000, மானியம் வழங்கியது.

சேவா ஸ்டேஜ் கடைசியாக நடித்த தேரோட்டி மகன் என்னும் பி. எஸ். இராமையா எழுதிய இதிகாச நாடகத்தின் மூலம் திரு. எஸ். வி. சகஸ்ரநாமம் தமிழ் நாடகவுலகில் சிறந்த புகழையடைந்து விட்டார் என் பதில் ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/66&oldid=1540643" இலிருந்து மீள்விக்கப்பட்டது