பக்கம்:நாடகக் கலை 2.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

தாளர்கள் முன் வந்து நாடகங்களை ஆக்கித் தமிழ் அன்னையை அலங்கரிக்க வேண்டும்.

இன்று தமிழ்த் திரைப்படவுலகில் இருந்து வரும் நடிகர்கள் பெரும்பாலும் பாலர் நாடக சபைகளிலிருந்து தோன்றியவர்கள். நாடக உலகம் அழிந்திருந்தால் சினிமா உலகுக்கு நடிகர்களே கிடைத்திருக்க மாட்டார்கள். இன்னும் நாடக நடன மேடைகளே சினிமாவுக்கு நடிக நடிகையரை உற்பத்தி செய்யும் நிலையங்களாக இருந்து வருகின்றன.

இந்த நாடகப் பணியில் இனிப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் பெரும்பங்கு கொள்ளவேண்டும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நாடகக் கல்வி சில ஆண்டுகள் நடைபெற்றதாகவும் இப்போது நடை பெறுவதில்லையென்றும் அறிகிறேன். மீண்டும் அது தொடர்ந்து நடைபெறுவதற்கு ஆவனவற்றைச் செய்யுமாறு மதிப்புக்குரிய செட்டி நாட்டரசர் அவர்களையும், துணைவேந்தர் அவர்களையும் பணிவன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன். சென்னைப் பல்கலைக் கழகத்தில் நாடகக் கல்வி தொடங்குவதாக துணைவேந்தர் அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் விரைவில் நடைபெற வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

வாழ்க! வளர்க நாடகக் கலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/69&oldid=1544826" இலிருந்து மீள்விக்கப்பட்டது