பக்கம்:நாடகக் கலை 2.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

சிலம்புச் செல்வர். ம. பொ.சிவஞானம், எம். எல். ஏ. அவர்கள்.

'அனுபவ ஞானம்' என்பது எளிதிற் பெற இய லாத அரும்பெரும் சொத்தாகும். இதனை ஒரு துறையில் ஒருவர் பெற்றிருக்கிருர் என்ருல், அதற்குள் அவர் முதுமையையும் அடைந்திருப்பார். அதனுற்ருன், மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்ற பொன் மொழி தோன்றியது.

நாடகக் கலைத் துறையில் ஒளவை தி. க. சண் முகம் அனுபவ ஞானத்தை முழுமையாகப் பெற்றுள் ளார். ஆறு வயதிலேயே நாடக மேடையில் நடிக்கத் தொடங்கி, இன்றுள்ள ஐம்பத்தாறு வயது வரைத் தொடர்ந்து அரை நூற்ருண்டு காலமாக நடித்து வரு கின்ருர். கலைஞர் தி. க. சண்முகத்திற்கு நடிப்புக்கலை தந்தையிடமிருந்து பெற்ற பிதிரார்ஜித சொத்து. அவர் மட்டுமின்றி, அவருடைய முத்தண்ணுக்களான தி. க. சங்கரன், தி. க. முத்துசாமி ஆகியோரும் இள வலான தி. க. பகவதியும் நடிகர்களாவர். மனுேன் மணியம்' என்னும் உயர்ந்த நாடக நூலை இயற்றிய பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தி. க. சண்முகத்திற்கு மாமனுர் முறையாவார்.

ஆம். கலைஞர் தி. க. சண்முகம் இரண்டு தலை முறைகளாக நாடகக் கலைத் துறையில் ஈடுபட்டுள்ள குடும்பத்தைச் சார்ந்தவராதலால், அத்துறையில் அவர் பரிபூரண அனுபவம் பெற முடிந்திருக்கிறது நடிப்பதனை வெறும் தொழிலாக மட்டுமல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/7&oldid=1322362" இலிருந்து மீள்விக்கப்பட்டது