பக்கம்:நாடகக் கலை 2.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

பள்ளிக்கூடத்திற்கு 'டிமிக்கி' கொடுத்துவிட்டு, கெட்ட பிள்ளைகளோடு சேர்ந்து ஊர் சுற்றி விட்டு, வீட்டிற்கு வரும்போது ஒன்றுமறியாத ஒழுங்கான பிள்ளை போல் வந்து அப்பா அம்மாவை எத்தனை தடவை ஏமாற்றி யிருக்கிறோம்?

வாழ்க்கையில் நடிப்பு

நடைமுறை வாழ்க்கையில் நம்மில் எத்தனையோ பேர் அபூர்வமாக நடிக்கிறார்களே; இந்த நடிப்பை யெல்லாம் அவர்கள் எந்தப் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொண்டார்கள்? வணிகர்கள், வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இவர்களில் பலர் தம் சொந்த வாழ்க்கையில் எப்படியெல்லாம் திறமையாக நடிக்கிறார்கள்? பிச்சைக் காரர்களின் நடிப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அது ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. தனிப் பெருங்கலை. நல்ல காலை முடமாக்கிக் காட்டுவார்கள்; நல்ல கண்ணைக் குருடாக்கிக் கபோதியாகக் காட்சியளிப்பார்கள். பொன்னான உடம்பைப் புண்ணாக்கிக் காட்டுவார்கள்; இப்படி எத்தனை எத்தனையோ அருமையான நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன். எனவே, நடிப்பென்பது எல்லோரிடமும் இயல்பாகவே இருந்து வருகிறது. ஆனால்,நாடக அரங்கில் அதை வெளிப்படுத்திக் காட்டுவதற்குத்தான் பயிற்சி வேண்டும்.

மொழிக்கு முன் தோன்றியது நடிப்பு

மனிதன் மொழியை உருவாக்கிப் பேசத் தொடங்கு வதற்குமுன் நடிப்பின் மூலம் தானே தனது எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இன்னும் கூட நமது தமிழ் மொழி தெரியாத பிரதேசத்தில் பிற மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/72&oldid=1544924" இலிருந்து மீள்விக்கப்பட்டது