பக்கம்:நாடகக் கலை 2.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யாளருடன் பேச வேண்டிய நெருக்கடியேற்படும் சமயத்தில் நாம் என்ன செய்கிறோம்? நடிப்புத்தானே நம்மைக் காப்பாற்றி உதவி புரிகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாங்கள் மலேயாவுக்குச் சென்றிருந்தபோது, சீன மொழியாளர்களுடன் கடை வீதிகளில் பேரம் பேசி பல பொருட்களை வாங்கினோம். எப்படி? எல்லாம் நடிப்பின் மூலம்தான்.

நம்மிடம் இயல்பாக அடங்கி இருக்கும் இந்த நடிப்பைத் தக்க முறையில் வெளிக்கொண்டு வர முயல வேண்டும். அதுதான் கொஞ்சம் சிரமமானது.

சிலப்பதிகாரத்தில்...

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாக நடிப்புக்குரிய பல செய்யுட்கள் இருக்கின்றன. உவகை, பெருமிதம், நகை, வெகுளி, வியப்பு,அவலம், அச்சம், வெறுப்பு, சமநிலை ஆகிய நவரச பாவங்களையும் எப்படி எப்படி வெளிப்படுத்த வேண்டுமென்பதற்குரிய குறிப்புக்கள் அதில் இருக்கின்றன. அவற்றையெல்லாம் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அது நாம் பயிலும் நடிப்புக் கலைவளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்யும். ஆனால், மேடையில் இன்றைய நாடகத்தில் அப்படியே பயன்படுத்த இயலாது. காரணம்; அந்த அவிநய முறைகள் எல்லாம் நாட்டிய நாடகத்திற்காக எழுதப்பெற்றவை. 'கதகளி' என்று சொல்லுகிறோமே அதைப்போன்ற ஆடலும் பாடலும் கொண்ட நாடகத்திற்கே உரியவை. இன்றைய நாடகத்தில் இயற்கை நடிப்பு வேண்டும்.

கை முத்திரைகளும், முக பாவங்களும் உடனுக்குடன் மாறிக்கொண்டிருக்கும் அந்த அவிநய முறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/73&oldid=1544969" இலிருந்து மீள்விக்கப்பட்டது