பக்கம்:நாடகக் கலை 2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்றை நிளைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது எந்தச் சுவையை அல்லது பாவத்தைக் காண்பித்தாலும் மேடையில் அந்த பாவம் அழகாக வெளிப்பட வேண்டும்.

அழும் போதும் அழகாக அழப் பயில வேண்டும். கோபம் கொண்டாலும் அழகாகக் கோபப்பட வேண்டும். எந்த வகையிலும் தன் முகத்தை விகாரப்படுத்திக் கொள்ளக் கூடாது நடிகன்.

சிரிப்பும் அழுகையும்

சிலபேர் சிரித்தால் அவர்கள் முகம் அழுவது போல் இருக்கும். அழுதால் சிரிப்பதுபோல் இருக்கும். இவற்றையெல்லாம் கண்ணாடியின் முன் நின்று நடித்துப் பார்த்துத் திருத்திக்கொள்ள வேண்டும். 'ஔவையார்' நாடகத்தின்போது ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

ஔவையாரில் ஒரு காட்சி; ஔவையார் மழையில் நனைந்து குளிர் பொறுக்க முடியாது வருகிறார். அந்த இடத்தில் வள்ளல் பாரியின் மகளிரான அங்கவையும் சங்கவையும் அவரிடம் பரிவுகாட்டி நனைந்த உடையை மாற்றி நீலச்சிற்றாடையைக் கொடுத்து உதவுகிறார்கள். அன்பு காட்டி அமுதூட்டுகிறார்கள். ஔவையார் வறுமை நிலையிலிருந்த வள்ளலின் மகளிரைப் பாரி மகளிர் என அறிந்ததும் பாரியின் மரணச் செய்தியையும் அவர்களின் கதியற்ற நிலையையும் கேட்டுப் பரிவு காட்டுகிறார்.

இந்தக் காட்சியில் அங்கவையாக எங்கள் குழுவில் நடித்த பெண் உண்மையிலேயே நன்றாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/78&oldid=1545027" இலிருந்து மீள்விக்கப்பட்டது