பக்கம்:நாடகக் கலை 2.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பெருந்தொண்டாகவும் கருதும் பண்பினை கலைஞர் சண்முகம் சகோதரர்களிடம் காணலாம்.

கலைஞர் தி. க. சண்முகம், நாடகக் கலையில் பெற். றுள்ள திறமையை மெச்சியும், அக்கலையின் வளர்ச்சிக் காக அவர் ஆற்றி வந்துள்ள தொண்டினைப் பாராட்டி யும் மாநில சங்கீத நாடகச் சங்கமும், மத்திய சங்கீத நாடக அகாதெமியும் அவருக்குப் பரிசுகள் வழங்கி யுள்ளன. அந்த இரு சங்கங்களில் அங்கம் வகிக்கும் பெருமையையும் அவர் பெற்றிருக்கிருர்,

இத்தகு சிறப்புக்களையெல்லாம் பெற்ற ஒரு நடிகர் 'நாடகக்கலை பற்றி நூல் எழுதுகிருரென்ருல், அது முழுமை பெற்றதாக, தமிழ் இலக்கியக் களஞ்சியத்திற்கு ஒரு புது வரவாக இருக்குமென்பதில் ஐயமில்லை யல்லவா?

நாடகக்கலை என்ற இந்நூல், கலைஞர் சண்முகம் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்காக நிகழ்த்திய சொற்பொழிவாகும். பட்டம் பெருத ஒரு வரை இதுபோன்ற வகுப்பறைச் சொற்பொழிவுக்கு அழைக்கும் மரபு நம் தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகம் எதனிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. பல்கலைக் கழகங்கள் தான் அறிஞர்களைத் தோற்றுவிக்க முடியு மென்பது விதி. அதனை யாரும் மறுப்பதற்கில்லை. ஆல்ை, எதிலும் விதிக்கு விலக்கு உண்டல்லவா? அதுபோல, விதிக்கு விலக்காகவேனும் பல்கலைக் கழகத்திற்கு வெளியேயும் அறிஞர்கள் தோன்ற முடியும் என்பதனை சிண்டிகேட்டுகளும், செனட்டுகளும், துணை வேந்தர்களும் ஒப்புக் கொள்வதில்லை. நல்ல வேளை பாக, நாடகத் துறையில் அனுபவம் பெற்ற முதியவர் களிலே பட்டதாரிகளாக இருப்பவர்கள் அரிதாதலால்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/8&oldid=1322363" இலிருந்து மீள்விக்கப்பட்டது