பக்கம்:நாடகக் கலை 2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

இடத்தில் வருகிறேன் என்பதை எவ்வளவு அழுத்த மாகச் சொல்ல வேண்டுமென்பதை எண்ணிப் பாருங்கள்.

ஒரு நாள் 'இரத்த பாசம்' நாடகத்தில் ராணி வேடம் போட்டவள் மறதியாக 'ராஜா நான் போய் வருகிறேன்' என்றாள். நான் ராஜாவாக நின்றேன். என்ன சொல்வது? 'நான் வருகிறேன்' என்று சொன்னால் உடனே 'வருகிறேன் என்று சொல்லி விட்டுப் போகிறாயே' என்று சொல்லலாம். அவள் அவசரத்தில் 'நான் போய் வருகிறேன்' என்றாள். நான் என்ன செய்வது? 'போய் வா' என்று ஆசி கூறி வழியனுப்பினேன்.

அழுத்தமும் மென்மையும் தெளிவும்

வார்த்தைகளைத் தெளிவாகவும், அழுத்தமாகவும் பேசுவதற்கு உதாரணமாக மற்றொரு காட்சி; 'தமிழ்ச் செல்வம்' நாடகத்தில் 'காதல்' என்னும் பகுதி, நல்ல சுவையான காட்சி. வார்த்தைகளிலேயே பன்னிப் பன்னிப் பேசுகிறாள் காதலி. அந்த உரையாடலைப் பாருங்கள்!...

தலைவன் : ஆருயிரே, என் மீது வீணாகக் குற்றம் சொல்லாதே. நான் எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. பிரிந்தது முதல் இது வரை உன்னையே நினைத்துக் கொண்டு ஓடோடி வந்திருக்கிறேன் கண்ணே.

தலைவி : என்ன! என்ன! என்னை நினைத்துக் கொண்டு வந்தீர்களா?

தலைவன் : என்ன இது! மீண்டும் அழுகிறாயே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/82&oldid=1550036" இலிருந்து மீள்விக்கப்பட்டது