பக்கம்:நாடகக் கலை 2.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

"நண்பர்களே, நான் பல ஆண்டுகளாக நடித்து வந்ததின் பயனை இன்றே பெற்றேன். என் முகத்திலே அந்தப் பெரியவர் வீசிய செருப்பு வெறும் பழஞ் செருப்பன்று; என் நடிப்புத் திறமைக்கு அவர் தந்த மகத்தான பரிசு. இது வரை நான் பெற்ற வெள்ளி, தங்கம், வைரங்களாலான பரிசுகளை விட, இது நூறு மடங்கு சிறந்த பெரும் பரிசு. நான் பெரும் பாக்கியசாலி."

என்று கூறிப் பெரியவரை வணங்கினார். இதுதான் நடிப்பின் வெற்றி.

கதாநாயகன் மேல் ஒரு அடிகூடப் படவில்லை. அத்தனையும் நடிப்புத்தான். கண்காணி காட்டிய வெறி; கதா நாயகன் கதறிப் புலம்பிய கோலம்; இருவரும் காட்டிய மெய்ப்பாட்டுணர்ச்சி; எல்லாம் காட்சியை உண்மைபோல் காட்டின. அதன் விளைவு சபையில் இருந்த ஒரு நல்ல ரசிகர் தன்னை மறந்தார். இதை நடிப்பின் வெற்றி என்று சொன்னேனல்லவா? இதோ பாருங்கள் மற்றொரு காட்சியை!

நடிப்பின் தோல்வி

பழைய நாடகந்தான்; 'பக்த பிரகலாதன்' கடைசிக் காட்சி; 'இறைவன் தூணிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான்!'...என்று சொல்லுகிறான் பிரகலாதன். ஆவேசங் கொண்ட இரணியன் 'இந்தத் தூணிலிருப்பானா?' என்கிறான். 'எங்குமிருப்பான். அவனில்லாத இடமேயில்லை' என்கிறான் பிரகலாதன். தூணை எட்டி உதைக்கிறான் இரணியன். தூண் இரண்டாகப் பிளக்கிறது. பயங்கரச் சிரிப்போடு நரசிம்ம மூர்த்தி வெளிப்படுகிறார். இரணியனுக்கும் நரசிம்ம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/86&oldid=1550633" இலிருந்து மீள்விக்கப்பட்டது