பக்கம்:நாடகக் கலை 2.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

நடிகர் தம்மை மறந்து உணர்ச்சி வசப்பட்டார். இது நடிப்பின் தோல்வி. நடிப்பிலே வெற்றி எது? தோல்வி எது? என்பதை விளக்கவே இந்த இரண்டு காட்சிகளையும் குறிப்பிட்டேன்.

நடிகன் தன்னை மறக்காமல் சபையோரைத் தன் வயப்படுத்தி விடுவது நடிப்பின் வெற்றி. நடிகன் தன்னை மறந்து பாத்திரத்தில் ஒன்றி உணர்ச்சி வசப்பட்டு சபையோரைத் திகைக்க வைப்பது நடிப்பின் தோல்வி.

நினைவாற்றல் வேண்டும்

நடிப்பைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் நடிகன் அந்தப் பாத்திரமாகவே மாறிவிட வேண்டும், பாத்திரத்தோடு ஒன்றிவிட வேண்டும், அப்போதுதான் நடிப்பிலே வெற்றி பெற முடியும் எனப் பலரும் சொல்லுவதைக் கேட்கிறோம். உண்மைதான்!...

கடுமையான வெயில்; காலில் மிதியடியும் இல்லை; நடந்து வருகிறார் ஒரு நண்பர். வீட்டிற்குள் நுழைந்ததும் 'அப்பா மண்டை பிளந்து விட்டது; கால் - கொப்பளித்து விட்டது' என்கிறார். நமக்குத் தெரியும், தண்பருடைய மண்டையும் பிளக்கவில்லை; காலும் கொப்பளிக்கவில்லை என்று. வெயிலின் வேகத்தை அவ்வாறு குறிப்பிடுகிறார் என்பதைப் புரிந்து கொள்ளுகிறோம்.

ஒரு நல்ல நடிகனைப்பற்றிக் குறிப்பிடும்போது 'அவர் நடிக்கவில்லை; அந்தப் பாத்திரமாகவே மாறி விட்டார்' என்று சொல்கிறார்களல்லவா? அதுவும் இப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/88&oldid=1550635" இலிருந்து மீள்விக்கப்பட்டது