பக்கம்:நாடகக் கலை 2.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

தனது மரபுக்கு மாருக கலைஞர் சண்முகத்தை அழைத்து நாடகக்கலை பற்றிப் பேசச் செய்திருக் கிறது அண்ணுமலைப் பல்கலைக்கழகம். அதற்கொரு கும்பிடு!

நாடகக் கலையின் ஒரு நூற்ருண்டு வரலாருக அமைந்துள்ளது இந்நூல். கலைஞர் சண்முகம் வரலாற்று ஆசிரியரல்ல. ஆயினும் ஒரு வரலாற்று ஆசிரியருக்கு இருக்க வேண்டிய விவேகமும், விசால மான மனதும், விருப்பு வெறுப்பற்று விமர்சிக்கும் பண்பும், சுவையற்றதையும் சுவையுடைய தாக்கும் எழுத்தாற்றலும் அவரிடம் இருப்பதனை இந்நூலில் கண்டு என் இதயம் பூரிப்படைகின்றது. அவர் என் னுடைய நண்பரல்லவா !

நாடகத்தில் பிரசாரம்' என்ற பகுதியில் கலை கலைக் காகவே என்ற கோஷத்திலுள்ள குறைபாட்டினை தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டி, கலை மக்களை வாழ் விக்கவும் பயன்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி, நாடகத்திலே பிரசாரமும் கலந்தால்தான் அது சாத்திய மாகு மென்று கூறுகின்ருர்.

நாடகக் கலையை, நடிப்பு, நாடக எழுத்து, பயிற்று விக்கும் ஆசிரியத் தன்மை, நடத்தி வைக்கும் அமைப்பு (கம்பெனி) ஆகிய பல்வேறு கோணங்களில் நின்று விமர்சிக்கிருர் ஆசிரியர். அதனுல், அளவால் சுருங்கிய தாயினும், நாடகக் கலையை விமர்சிப்பதிலே முழுமை பெற்றதாக விளங்குகின்றது இந்நூல்.

நாடகக் கலையின் சிறப்பை, அதனுல் விளைந்து வரும் நற்பயன்களை எடுத்துரைக்கும் ஆசிரியர் ஆங்

காங்கே தம்முடைய~தம் சகோதரர்களுடைய-தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/9&oldid=1322364" இலிருந்து மீள்விக்கப்பட்டது