பக்கம்:நாடகங்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 காட்சி எண் : 14 அரண்மனை அரண்மனை விழாக்கோலம் பூண்டிருக்கிறது. குழந்தையும் கையுமாக வந்து நின்ற ஏழைத் தந்தையர்க்கெல்லாம் கரவைப்பசு தருகிருர்கள். மங்கலப்பெண்களுக்கு மஞ்சளும் குங்குமும் தருகின் ருர்கள். அந்தணர்கள் பந்தி பந்தியாய் விருந்து உண்ணுகிருர்கள். ஆடை மணிகள் அபாரமாகக் குவிந்து கிடக்கின்றன. புலவர் பெருமக்கள் பொன் னும் மணியும் புதுப்பட்டும் தட்டோடு பெற்றுச் செல்கிரு.ர்கள். இந்த சூழ்நிலையில் வேதமுழக்கத் தோடு வேள்விக்கு மீள்கிருர்கள். அரசனும் அரசி யும்யாகத்தலைவர்களாய் வேள்விக்குமுன் அமர்ந்து, நெய்யும் பொரியுமிட்டு வேள்வி வளர்க்கிரு.ர்கள். வேள்வித்தி கொழுந்து விட்டு பளபளத்து ஜொலிக்கிறது. வேதமுழக்கம் மிடுக்காகிறது.அந்த நிலையில் சிவந்த அனலிலிருந்து ஒரு தங்கத்தாமரை மொட்டாக தலைதுாக்கி எழுகிறது. தண்டு உயர்ந்து மன்னவன் பக்கம் தலை சாய்க்கிறது. அரசன் தாமரை மொட்டை ஏந்தி எடுக்கிருன், அனைவரும் வியப்படைகிருர்கள், அரசன் தாமரையை அரசி யிடம் கொடுக்கிருன். குழந்தையின் குவா குவா என்றகுரல் கேட்கிறது. அரசியின்கரத்தில் தாமரை மலர்கிறது. அதிலே தளதள வென்ற அழகான குழந்தை கன்னங்குழிய குறுநகை புரிகிறது. அரச னும் அரசியும் மெய்மறந்து பூரிக்கிருர்கள், அவைக் களத்திலே மகிழ்ச்சி வெள்ளம் பெருகுகிறது. -- குரல்கள் : வாழ்க! வாழ்க! வாழ்க! மதுராபுரி தெய்வம் மகளாக வந்துவிட்டாள். அன்னை கெளரி அன்புமகளாக வந்துவிட்டாள். தென்னவர் நாட்டுக்குப் பெண்ணரசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/100&oldid=781489" இலிருந்து மீள்விக்கப்பட்டது