பக்கம்:நாடகங்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 அம்ப : ஏப்யா ... பொம்மைகளையா கொண்டு வந்தீங்க. இதுக்குப் பதிலா அதுகளையே ஒட்டிகிட்டு வந் திருக்கலாமே? பொம் . குறும்பு என்ருல்... அம்ப நீங்களே போதும். பொம்மை வேறே எதுக்கு? (அப்போது சுவடிக்கட்டை சுமந்து கொண்டு புலவர் வருகிரு.ர்.) அம்ப : வாங்கய்யா ... இது என்ன கணக்குக் கட்டா? புலவ அன்றுஅன்று. யாம் படித்த ஏடுகள். என்னை மிஞ்சி எவனும் படித்திருக்க முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக சுமந்துவந்திருக்கிறேன். அம்ப : (நகைத்துக்கொண்டே அய்யோ பாவம்! தலைக்கு மேலே சுமந்துக்கிட்டிருக்கீங்க. உள்ளே சுமந்திருந்தா நல்லாயிருந்திருக்கும். புலவ யாது புகல்கின்றன? (என்று கோபமாகக் கேட்கிரு.ர். சமாளித் துக் கொண்டு) அம்பலம் : நீங்களெல்லாம் வர்ரதுக்குமுந்தியே அந்த நல்ல முகூர்த்தம் வந்திடுச்சி. அங்கே மீளுரட்சிக்குப்படிப்பு ஆரம்பிச்சுட்டாங்க. பரவாயில்லே நீங்களும் கலந்துக் குங்க. சாப்பாடும் தட்சணையும் உங்களுக்கும் கிடைக் கும்! வாங்க வாங்க. (என்று எல்லோரையும் உள்ளே அழைத்து செல்கிருன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/108&oldid=781504" இலிருந்து மீள்விக்கப்பட்டது