பக்கம்:நாடகங்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 ஆசிரியர் : இல்லேயம்மா. நான் கற்றுக்கொடுத்ததைவிட கற்றுக்கொண்டதுதான் அதிகம். (அவள் வாளே வாங்கி முத்தமிடுமுெர்) காட்சி எண். 26 கோட்டை வாசல்வெளி கோட்டை வாசல் முன் வெளியில் அலங்கார மேடை கட்டியிருக்கிரு.ர்கள். அதிலே அரசனும் அரசியும் கொலுவிருக்கிரு.ர்கள். பரிவாரங்கள் புடைசூழ்ந்திருக்கின்றன. மக்கள், வெள்ளம்போல் திரண்டு மச்சுகளிள் மீதெல்லாம் அமர்ந்திருக்கிருர் கள். அதற்கு முன் வெளிவாயிலுக்கு வந்து சேரும் சாலையில் வெகுதொலைவிலிருந்து மின்னல் வேகத் தில் சில குதிரைகள் பாய்ந்து வந்து கொண்டிருக் கின்றன. அவற்றின் வருகையிலே ஆர்வம் உடைய வர்களாக மக்கள் ஆர வாரித்திருக்கிரு ஸ். வந்த குதிரைகளை வென்று கொண்டு ஒரு வென் - க் குதிரை அகழிக்கு அப்பாலிருந்து பாய்ந்து முன் வெளியில் குதிக்கிறது. அந்த வெளியை தாண்டி வந்து முன்னங்காலை உயர்த்தி மன்னனுக்கும் மக்க ளுக்கும் வீர வணக்கம் செய்து கனைத்து நிற்கிறது. அந்தக் குதிரையை நடத்திய வீரமங்கையாக மீனட்சி குதித்து மேடைக்கு வருகிருள். அரசனும் அரசியும் ஆர்வத்தோடு அனேத்துக்கொண்டு தங்களுக்கிடையே அமர்த்திக் கொள்கிரு.ர்கள். வாழ்க மீனுட்சி வெல்க மீளுட்சி என்ற குரல்கள் வானத் தொடுகின்றன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/118&oldid=781526" இலிருந்து மீள்விக்கப்பட்டது