பக்கம்:நாடகங்கள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 லுக்கும் சாட்சியாக நீங்கள் உடன் செல்கிறீர்கள். பார்க்கின்ற மணமகன் எல்லா வகையிலும் தலைமகளுக இருக்க வேண்டும். அதோடு ஒரு நிபந்தனை. என் மகள் இன்னெரு நாட்டு அரசனுக்கு மனைவியாகப் போக மாட்டாள், வருகின்ற மணமகன் இந்த நாட்டு அரசியின் கணவனுக இங்கேயே இருந்துவிட வேண்டும், இதற்கு சம்மதித்தால்தான் சம்பந்தம். (புலவர் ஒருவர் கூறுகிருர்) புலவர் பிரபு மருமகன் என்பதோடு இந்த மதுரை நகர் ஆளும் திருமகன் என்பதை யாரே மறுப்பார்? எல்லாம் தங்கள் மனம்போல் நடக்கும். நாங்கள் சென்று வருகிருேம். (என்று கூறிவிட்டு எல்லோரும் விடை பெறுகிரு.ர்கள்). காட்சி எண். 30 சோழன் மாளிகை சோழன் : மதுரைப் புலவரே, இந்த மகத்தான சம்பந்தத் துக்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும். புல : இதோ எங்கள் இளவரசியின் மலரோவியம். (என்று பட்டுத்துணிபோர்த்திய படத்தைப்பிரிக்கப் போகிருர் 1 (சோழர் கையமர்த்தி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/123&oldid=781538" இலிருந்து மீள்விக்கப்பட்டது