பக்கம்:நாடகங்கள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 காட்சி எண். 31 சேர மாளிகை (வயது முதிர்ந்த சேரமன்னன் ஆசனத்தில் அமர்ந்திருக்கிருன்) மன்ன : புலவரே அந்த பிரம்மன் என் கையில் அகப் பட்டால் அவன் தலைகளில் ஒன்றை கிள்ளியே தீருவேன். 70 ஆண்டுகளுக்கு முன் என்னேப் படைத்த குற்றத்திற் காக...ஆனலும் மன்னிக்கிறேன். என்ன சொல்கிறீர். புல : தாங்கள் சொல்லுங்கள். மன்ன ! உங்கள் இளவரசிக்கு ஏற்ற வயதில் எனக்கொரு பேரன் இருக்கிருன். அவன் வீரத்தில் புலிப்பால் குடித்து வளர்ந்தவன். எங்கே அவனுக்கு நிகரானவளா உங்கள் பெண், காட்டுங்கள் பார்ப்போம். (என படத்தை வாங்கிப் பார்க்கிரு.ர். படம் ஒரு பச்சிளங் குழந்தையாகத் தெரிகிறது) புலவரே என்ன நினைத்தீர்? ஏளனம் செய்ய வந்திரா... இந்தத் தவழும் குழந்தைக்குத் தாலி கேட்டனுப்பிய உங்கள் தார் வேந்தன் ஆணவத்தை அடக்கியே தீருவேன். (என வாளே உறுவுகிருன். புலவர் திகைத்துப் பின் வாங்குகிருர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/125&oldid=781542" இலிருந்து மீள்விக்கப்பட்டது