பக்கம்:நாடகங்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 உதியன் மலைச்சாரல் தந்த வளத்தில் தலைக் காடு தழைத்திருந்தது. சந்தனத்தில் விறகெரிப் பார், தந்தத்தில் மாட்டுத் தொழு அடிப்பார்? தேக்கில் தெருவுக்குப் படி மிதிப்பார். வீம்பு இவர்கள் பிறவிக் குணம். வேட்டை அவர்கள் பொழுது போக்கு, பள் ளம் பறித்து, பசுந்தழையால் அதை மறைத்து வேழங்களை ஏய்த்துப்-பிடித்தனர் வனத்தில். புலி களின் வாலைச் சேர்த்து முடித்தாள் அந்தக் கோட் டைக்குத் தலைவி. தலைக்காட்டு வேந்தனுக்கு மகள். அவள் குழல் நெளிவில் வண்டிருந்தது. விரல் வளைவில் நண்டிருந்தது.விழிகளில் கெண்டை இரண் டிருந்தது. மொழிகளில் கற்கண்டிருந்தது. நடை களில் வாழைத் தண்டிருந்தது பேரழகில் பெண்மை திரண்டிருந்தது. மலர்செண்டெடுத்துச் செய்த சித் திரப்பாவை அவள்...நெஞ்சில் வீரம் குடி கொண் டிருந்தாள். சரித்திரத்தில் நாச்சியார் கன்னர தேவி எனப்பெயர் கொண்டிருந்தாள். அவள் தான் தலைக்காட்டு நங்கை! அவள் வனத்திருந் தாள். தலைக்காட்டு வாயிலில் செம்பியன் மழவ ராயன் சினத்திருந்தான். நுளம்பன் விடுத்த ஒலை படித்திருந்த வேந்தன் நெஞ்சம் கனத்திருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/13&oldid=781552" இலிருந்து மீள்விக்கப்பட்டது