பக்கம்:நாடகங்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 குழந்தைக்குத்தாலி கேட்டனுப்பிய - அவன் செறுக்கு அடக்குவேன். கிழட்டு மலையத்துவஜனை களத்திலே. சந்திக்கச்சொல்...திருமணம் ஒரு கேடா... சேசே...இனி என் வாள்தான்பேசும் புலவா என்ன ஆணவம்...உங்கள் கோட்டையிலே எங்கள் கொடி பறக்கும். போர் போர் போர்... (எனக்கொக்கரிப்புகளும் எக்காளச்சிரிப்பு களுமாக எதிரொலித்து பாண்டியனை பதைக்கவைக்கின்றன. . பாண்டியன் மனத்தின் குரல்:- - நீ பெண்ணென்று வளர்த்தவளை பேயென்று சொல்லிவிட்டார்கள். கண்னென்ன்று வளர்த்தவள்ை . கனலென்று ஒதுக்கிவிட்டார்கள். உன் மகளுக்கு இனி மணக்கோலமில்லை. மதுரை பிணக்காலாக போகிறது. போச்சுது, பேச்சுது மானம் போச்சுது. மதுரையின் புகழ் போச்சுது, போச்சுது, (இந்த வேதனை உணர்வுகளின் தாக்குதல் ஆசனத்திலிருந்து சாய்கிருன்.) காட்சி எண். 38 சுடுகாடு சுடலையில் தி கொழுந்துவிட்டு எரிகிறது. அந்த _ ஜ்வாலைக்கு முன்னல் மீளுட்சி உக்ரமாக நிற்கிருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/130&oldid=781554" இலிருந்து மீள்விக்கப்பட்டது