பக்கம்:நாடகங்கள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 காட்சி எண் 45 உணவுச் சாலை குண்டோதரன் பலகாரக் குவியல்களின் வரிசைகளுக்கு இடையே நடந்து செல்கிருன். தட்டு தட்டாக இருந்த லட்டுகளும் அதிரசங்களும் முறுக்குகளும், ஜாங்கிரிகளும், விளையாட்டுச் சக்கரங்கள் உருண்டு ஓடுவதுபோல்குண்டோதரனே தொடர்ந்து ஒடுகின்றன. தட்டுக்கள் காலியாகிக் குவியல்கள் ருேகின்றன. பலகாரங்களின் பெயரும் சுவையும் சங்கச் சொற்களாக இடையிடையே ஏப்பத்தோடு விருத்தமாகிறது. நூற்றுக்கணக்கான ஆட்கள் கறி, ரசம், குழம்பு முதலியவற்றைச் சோற்ருேடு போருகக் கொட்டி சேறு கலக்குவது போல் மிதித்து கலக்குகிரு.ர்கள். குண்டோதரன் ஒரு பெரிய பானையின் மீது உட்காருகிருன். காள வாயிலில் செங்கற்களை அடுக்கடுக்காக அடைப்பது போல உருண்டை உருண்டையாகத் திரட்டி கு ன் ேடா த ர னி ட ம் அனுப்புகிருர்கள். சோற்றைத் தின்று தீர்க்கிருன் குண்டோதரன் பாயசம் வாளிவாளியாகக் கொண்டுவரப்படுகிறது மற்ருெரு புரத்தில் வெற்றுவாளிகள் குவிகின்றன. இவற்றிற்கு மேல் குண்டோதரன் தாகம் தாக மென கர்ஜிக்கிருன். வீரர்கள் நீண்ட மூங்கில்களைக் கொண்டுவந்து நீட்டுகிருர்கள், மூங்கிலின் ஒருமுனை குண்டோதரன் வாயில் இருக்கிறது. அடிப்பாகம் கிணறுகளிலும், குளங்களிலும், ஏரிகளிலுமாக அங்கெல்லாம் தண்ணிர் வற்றவற்ற மீன்கள் துள்ளி குதிக்கின்றன. தண்ணிர் பற்ருமல் குண்டோதரன் தாகம் தாகமெனத் தரையில் உருளுகிருன். மீளுட்சி-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/144&oldid=781584" இலிருந்து மீள்விக்கப்பட்டது