பக்கம்:நாடகங்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

、"W功「: 1 Jo காளி வருவாள்; கூளி எழுவாள்; கிங்கரர் நடம் புரிவார்; ரத்த ஆறு ஓடும்; பிணமலைகள் குவியும்; எமபுரத்துக்கு அது தலைவாசல். அந்தக் கொடு மைகளை நீர் பாட்டெழுத ஒரு பெரும் போர் நடத்தவேண்டுமா? கூத்தரே...எனக்குப் பரணி வேண்டாம்! ஈசனுக்கே எழுதுங்கள். கூத் : ஏடுகள் திருத்தி வைத்தேன். எழுத்தாணி அர முறி பார்த்தேன். எழுது, எழுது என்று வாணி கூவுகின்ருள். நல்ல தமிழ்ச்சொற்கள் நான் நான் என்று வருகின்றன. தக்கன் பகை யாவான் சங்கரன் வாகை சூடுவான்! யாகத் தைக் கதையாக்கிப் பாடுவேன் தக்கயாகப் பரணி.

எழுதுங்கள்... அதனை அரங்கேற்றி நான் புகழ் பெறுவேன்.

5 சில நாட்களுக்குப்பின் பழையாறைக்கு பைரவி என்ற ஒரு கழைக் கூத்தி வந்தாள் அவள் ஏவலுக்குச் சில கிழவர்; காவலுக்குச் சில புலிகள். அந்தரத்தில் பம்பரம் சுழன்ற அதிசயத்தைக் கண்டனர் மக்கள். அவள்கழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/20&oldid=781610" இலிருந்து மீள்விக்கப்பட்டது