பக்கம்:நாடகங்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 7 மலே அழைப்பை மறுத்தால், அதிகாரம் வரும். பை : கோலெடுத்தால் குரங்காடும், மயிலாடாது. மலை : மன்னவன் கட்டளைக்கு மறுப்பா? பை : மன்னவன்! கலைக்கு முன்னல் மிக மிகச் சின்னவன்! மலே: என்ன சொன்னய்? உன் நாக்கைத் துண்டிப் பேன். பை : நிச்சயம் செய்வாய்!... குத்தும் கொலையும் தானே உங்களுக்குக் கை வந்த தொழில்! ஊர் மக்களைப் பார்த்து: ஐயா பெரியவரே! உங்கள் திண்ணையை எதிர் வீட்டுக்காரன் இடித்தால் பார்த்துக் கொண்டிருப்பீரா? ஒருவர்: அது எப்படி? பை அரசன்- அடுத்த நாட்டுக் கோட்டையை இடித்து, எரித்து, கழுதை ஏர் பூட்டி கள்ளி யும், முள்ளியும் விதைத்து வருகின்ருனே... அதில் இருக்கின்ற கலை என்ன சொல்லுங்கள் ஐயா! உங்கள் வேலியை பக்கத்து ஆள் நகர்த்தினுல்? மம்ருெருவன்: அது எப்படி? பைர : அரசன் எல்லே கடந்து, இனம் கடந்து, - மொழி கடந்து, அடுத்த மன்ன வளைத்துப் பிடிக்கிருனே- அதில் எங்கே கலையிருக்கிறது? & fT. — *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/24&oldid=781618" இலிருந்து மீள்விக்கப்பட்டது