பக்கம்:நாடகங்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பைரவி : என்ன வேண்டும்? எனக் கேட்டாள். கள்வன் : நான் யாரென்று தெரிந்தால்? பைரவி : இது பேயிருக்கும் வீடென்று தெரிந்தே இருப்பவள் நான்... நீ? கள்வன் : கள்வர் கோமான் கழுகுமலை இருளப்பன்! பைரவி; கொல்லைப் புறமாக வருகின்ற ஒரு கோழை! எங்கள் மலைத்திருடர்கள் நேரம் சொல்லி வருவார்கள் (என ஏளனமாக பார்த் தாள். அதற்கு நாணுற்றவன் போல் பின் நகர்ந்தான்.) கள்: நீ யார்? பை: கொல்லிமலை மழவன் மகள் கள்: மழவன் எனக்கினிய நண்பன். இந்த மன்ன னுக்காக உயிர் கொடுத்த மறவன்! அவன் மகளா நீ? நீயேன் ஆடிப் பிழைக்கின்ருய்? பைர: நீயேன் திருடிப் பிழைக்க வேண்டும்? கள்: இது கள்வர் குல மரபு. பைர : இது என் கலை மரபு, உள்ளே என்ன பார்த்தாய்? கள் : உன்னைத்தான் பார்த்தேன். பை : நீ கொள்ளையிட என்ன இருக்கிறது?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/31&oldid=781633" இலிருந்து மீள்விக்கப்பட்டது