பக்கம்:நாடகங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 கள் : கள்ளின் குடங்கள் இரண்டிருக்கின்றன உன் கண்களில்; முத்துகளைச் சிந்துகின்ற மோகனச் சிரிப்பிருக்கிறது உன் இதழ்களில். பைர நீ என்ன கவி படித்தக் கள்ளன? கள்: கவியரசன் வால்மீகி வேடன் என்ருல் கலை படித்தவளே! நான் கவி படித்திருக்கக் கூடாதோ? பை: இன்னும் படிக்கலாம். இந்தத் திருட்டு வழியை விட்டு தெரு வழியாக வா: உனக்காக வாசல் திறந்திருக்கும்... கள்: வழியில், புலி கட்டி வைத்திருக்கிருயே? பை: அது பொல்லாதவர் நுழையாமலிருக்க. என்ருள். திரும்பிச் சென்ருன். சிறிது நேரம் சிந்தனைத் தேரேறி நின்ருன் அந்தக் கள்வர் கோமான். பின் இருளில் மறைந்தான். 1 3 நடைத் திண்ணையில் நட்டுவத் தாத்தன் பாக்கு இடித்துக் கொண்டிருந்தான்: கிழ: பேத்தி, பின் புறத்தில் வந்தது யார்? பை: கள்வர் கோமான் கழகு மலை இருளப்பன். !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/32&oldid=781635" இலிருந்து மீள்விக்கப்பட்டது