பக்கம்:நாடகங்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O பள்ளிப் படையில் பைரவி தனித்திருந்தாள். அவள் நெஞ்சத்தில் ஆயிரம் ஆயிரம் நினைவின் அஃலகள்! தன் வஞ்சத்தை தீர்த்து வைக்க வந்ததொரு தெய்வம் கழுகு மலைக் கள்ள னென்ற நம்பிக்கையை வளர்த்திருந்தாள். அவன் வந்து நின்ருன். அவள் செவ்விழிதல் ஒரு மாதுளை முத்துத் தெரித்தது. இமை கனத்திருந்த ஒரப் பார்வை அவனைக் கொன்றது. கள் : விந்தனை என்ன பெண்னே? Dr : சோ | ன் மனைக்குள் உன்னைப் போகச் ו-ו (היי சொன்ன பிழைக்கு வருந்தியிருந்தேன். கள் : அச்சம் பெண்களுக்கு உடன் பிறப்பு என் பதையே காட்டுகிறது இந்தப் பேச்சு. பை அஞ்சுவது, அஞ்சாமை பேதமை என்ற பெருஞ் சொல் எனக்கும் பாடம் உண்டு. கள் : சோழன் வலிமை பெரிது, காவல் அதிகம் என்ற புத்தி எப்போது வந்தது? பை நிறுத்து, புலியின் தோலைத்தான் உடை யாகத் தரித்திருக்கிருன் சிவன்! புலியின் சித்திரத்தைத்தான் கொடியாகப் பிடித் தருக்கிருன் சோழன்; உயிர்ப்புலியுடன் விளை யடுபவள் நான்! எனக்காக நீ ஏன் இறக்க வேண்டும் என்பதற்கே அச்சப்பட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/46&oldid=781664" இலிருந்து மீள்விக்கப்பட்டது