பக்கம்:நாடகங்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 அவன் கால்கள் சிறகுகளாயின. விடுதிக்கு விரைந்தான். விளக்கின் சுடரைத் துாண்டினன் ஒலைச்சுருள் பிரித்தான். அதில் முதலேடு அவனுக்கிருந்தது. ஏட்டில் இருந்தவை: காளியின் வீரக்கழல் போற்று தும்-தாத்தனே...பாடு தீர்ந்தது-இருளப்பன் எனக் காகத் தன்னுயிரும் தருவான்; மகுடம் எடுக்கும் பொறுப்பு அவனுக்கிட்டிருக்கிறேன். மற்றபடி தென்னடு என்னுடாக ஒலை கொண்டு செல்லும் வேலை உனக்கு, எனப் படித்ததையே உணர்ச்சிப் பெருக்கோடு படித்துப் பார்த்தான். நெஞ்சு நிமிர்ந்தது. அவன் எதிர்பாராதபடிக்கு இருளப்பன் வந்து நின்ருன். கள்: என்ன கிழவா...இன்னும் இருக்கின்ருய்? கிழ: எமன், என்னைக் கேட்காமல் நாள் வைப்ப தற்கில்லை அதனால் இருக்கிறேன். கள்: செம்பியன் மழவராயன் ஆள் வைத்து விட் டான். சிறிது நேரத்தில் இந்த விடுதி வளைக் கப்படும்... கிழ: கழுகுமலை இருளப்பன், வந்த பிறகு எனக் குக் கவலை ஏன்? கள்: என் குதிரைக்கு உன்னேயும் சுமக்க வலு வுண்டு, புறப்படு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/59&oldid=781691" இலிருந்து மீள்விக்கப்பட்டது