பக்கம்:நாடகங்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 கள்: ஆடிப் பதினெட்டுக்கு நீ நாள் வைத்தால் நான் ஆனி முதலுக்கே முந்திக் கொள்கிறேன் என ஏடு திருத் தி எழுதினன். எ டு: கவிங்கத்து கா வலனே, நம் கவலை தீரக்காலம் வந்தது. ஆனி முதல் நாள் நம் அவலம் தீரும் திருநாள். ஆறை நகர மக்கள் சத்தி முற்றத்தி ருந்து பட் உச்சிரத்துக்கு முத்துப் பந்தல். எடுக்கின்ற மோகத்திலிருப்பார்கள். திருவிழாக் கூட்டத்துக்குத் திசை தெரியாது. இந்த ஆராவாரத்தில் அன்ருெரு நாள் கொடி யறுத்த வீரன் எங்கள் முடி எடுத்து வருவான். குலோத்துங்கன் சரித்திரத்தை முடிக்க நீவருக. உன் பாட்டன் அனங்கவர் மனுக்கு நேர்ந்த அவமானத்தை துடைக்க நாள் வந்து விட்டது. வா ளெடுத்த விரர் ஆயிரவர் அப்பரின் தொண்டர் போல் அவதாரமெடுத்து உழ வாரப் படையுடன் தேவாரம் பாடி வரட்டும். மற்றபடி நம் வெற்றிக்குத் திருநாள் நடத்து கின்ற பொறுப்பில் நானிருக்கிறேன். வரங்கல் அரசே-! வடபுலத்தில் மேலாதிக் கம் செலுத்து கின்ற சோழர்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வருக ! அவர்கள் முத்துப் பந்த லெடுக்கின்ற நேரம் - சோழ மாளிகையில் நம் வெற்றிக் கொடி பறக்க விடலாம். சூழ்ச்சிக்குப் பெரும் படை எதற்கு?...ஆயிரம் பேர் அப்பரின் தொண்டராக வரட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/62&oldid=781699" இலிருந்து மீள்விக்கப்பட்டது