பக்கம்:நாடகங்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 ஒல்லையூர் சென்று விட்ட நெல்லே பாண்டி யரே...இனி தில்லை வரை உமக்காகும் திருநாள் ஆனி முதல் நாள் உங்கள் அப்பர்கள் உழவாரப் படையுடன் ஆறை நகர்க்கு வரட்டும். நாமர்க்கும் குடியல்லோம் என்ற தேவாரம் தெருவெல்லாம் முழங்கட்டும். சோழன் நம் பேரவையில் சிறையாவான்மற்றபடிஅவர் சரித்திரத்தை முடித்துவைப்போம். இப்படிக்குத் தலைக்காட்டு நங்கை நாச்சியார் கன்னரதேவி. என எழுதி முடித்து-முன்னைச் சுருள் போல் மடித்து கிழவனின் மடியில் எடுத்த இடத்தில் வைத்து விட் டான். அவள் எழுத்தை மறுபடியும் படித்து விட்டு எரிந்து கொண்டிருந்த சுள்ளியோடு எரித்து விட் டான். கோழி கூவிற்று-குறிப்புணர்த்தின்ை. பூசாரி கிழவனே. உசுப்பினன். எழுந்த கிழவன் இருளப்பன் உறங்கிக்கொண்டிருக்கக் கண்டான். கிழ; நல்ல உறக்கம். கலைக்க வேண்டாம். நான் விடை பெறுகிறேன். எழுந்ததும் இருளப்ப னுக்குச்சொல்லிவிடு. எனப் புறப்பட்டான் கிழவன். கள்ளப்பார்வையும் எள்ளல் சிரிப்பும் இருளப்பன் முகத்தில் தேங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/64&oldid=781703" இலிருந்து மீள்விக்கப்பட்டது