பக்கம்:நாடகங்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 உங்கள் பெருமைக்கு இங்கே ஒரு மாசும் நேராது... நீங்களெல்லாம்... முத்துப் பந்தல் விழாவுக்கு அன்பர்- இவள் முடி சூட்டுக்கு நண்பர்- எனக்கினிய விருந்தினர்! இன்று முதல் இவள் உரிமை பெற்ற தலைக்காட்டுக்குத் தனியரசி! கூத் : தமிழ் நாட்டுக்கே பேர் அரசியாக நான் வாழ்த்துகிறேன். பாண் : கன்னர தேவி... தென்னடு உன்னுடாக நீ கண்ட கனவு பலித்து விட்டது. இந்த நல்லுறவுக்கு நான் பெருமைப்படுகிறேன். அர : கங்கர் மகள்- எங்கள் பங்காளி வீட்டுப் பெண் அவளுக்குச் சீராகத் கொப்பத்துத் (கொல்லாபுரத்து தங்கச்) சுரங்கத்தை ஒப்பு விக்கிறேன். வார இது சோழ பெருந்தகையின் பண்பின் வெற்றி... தலைக்காட்டு நங்கைக்கு அன்பின் வெற்றி... இந்த மகிழ்ச்சிக்கு என் காணிக்கை. கவிச்சக்கரவர்த்தி கம்பரை சோழர் பேரவைப் புலவராகத் திருப்பித் தருகிறேன். கலி : ஆண்டுக்கு ஆயிரம் யானைகள் சோழர் படைக்கு எங்கள் கலிங்கத்தின் காணிக்கை! அர : இந்த நன்றிக்கு மகிழ்ச்சி! இந்த நிகழ்ச்சிக்கு நினைவாக அன்று விதித்த சுங்கத்தைத்தவிாக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/73&oldid=781722" இலிருந்து மீள்விக்கப்பட்டது