பக்கம்:நாடகங்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்படி வடக்கு நோக்கி நாம் சென்றது மட்டும் வரலாறல்ல. வடக்கிருந்து அசோ கன் கலிங்கம் வந்திருக்கிருன், ஹர்ஷன் நர்மதை வரை வந்திருக்கிருன். மாலிக்கா பூர் மதுரை வரை வந்திருக்கிருன். ஒளரங்க சிப் அகில இந்தியாவையும் ஒரு குடைக்கீழ் கொண்டு வர துடித்திருக்கிருன். அவன் துடிப்பில் விழுந்த துண்டுகளே தென்னுட்டு நவாப்புகள். இப்படிப்பட்ட போர்ச் செலவு கள் ஒன்றில் காவிரியும் கங்கையும் மோதிக் கொண்டிருக்கிறது. அந்த சித் தரிப்பே இந்த கங்கைக்கு அப்பால். திருச்சி மாவட்டத்தில் ஜெயங் கொண் டம் உள்வட்டத்தில் சரிந்த கோட்டையும் இடிந்த கோபரமும் பிளந்த லிங் முகமாக கங்கை கொண்ட சோழபுரம் என்றதொரு பழமையான சி ர றா ரு ம் வானுயர்ந்த கோயிலும் இன்றும் நம் சரித்திரப் புகழுக்கு சாட்சி தந்து கொண்டிருக்கின்றன. அங் கிருந்து ஒன்றிரண்டு கல்மேற்காக தகர்ந்த கரையோடு துரர்ந்து கிடக்கும் பெரியதொரு நீர்த் தேக்கம் கடலெனப்பரந்து கிடக்கிறது. அதன் பெயர் சோழகங்கம் அந்த கோயி லும், கோட்டையும் ஏரியும் ஏற்பட்ட வர லாற்று விளக்கமே இ ந் த கங்கைக்கு அப்பால். ஏ. கே. வேலன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/77&oldid=781730" இலிருந்து மீள்விக்கப்பட்டது