பக்கம்:நாடகங்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கைக்கு அப்பால் பனி ம8லயின் உச்சி.ரிலே தமிழ் நிறுத்தி பட்டினப்பாலேக்குப் பாட்டுடைத் த&லவருகி. காவிரிக்குக் கரை எடுத்த கரிகாலன் கொடி வழி யில், விண்ணிலே புலி பறக்க தான் பெற்ற போர்ப்புண்ணிலே புகழ் பரக்க தஞ்சையைத் தலைநகராக்கினுன் விஜயாலய சோழன். அங்கே வளர்ந்து வந்த வல்லமைக்கும், வரலாற்றுக்கும் எடுத்துக்காட்டாக நிமிர்ந்து நின்றது பெரிய கோயில்; அந்தக் கலையோடு வளர்ந்த σσούαυσόν சாஜராஜன். அவன் புகழ் முடித்த பின் பொன் முடிசூடினன் ராஜேந்திரசோழன். கீழ்த்திசை வில், கதிரவன் எழுகின்ற களம் காணவேச கடல் மேல் தமிழ் நிறுத்தவோ-அலைகடல் கிழிய நெடுங்கலம் செலுத்தினன். ஈழம் தமிழில் மாயிற்று சாவகம் பணிந்தது. பூவகம் உரிமைப் பட்டது. இந்துச் சீனகம் திரை கொடுத்தது. ஐராவதி வெள்ளத்தில்எதிரேறி நீந்தினன். பிரம தேயக் கடாரப் பெருநகர் பிடிப்பட்டது. வெற்றித் திருமகள் அவன் உரிமைப் பெண் ஆள்ை. இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/78&oldid=781732" இலிருந்து மீள்விக்கப்பட்டது