பக்கம்:நாடகங்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் தமிழ்ப் பெரு மகனே, தமிழ்ப் பெரு மகனே, மூன்றுக்கு மேற்சென்று எண்ணத் தெரியாதோ மும்மூர்த்திகளென்ருய், மூவேந்தர்களென்ருய் முழு முதற் கடவுளுக்கு மூன்று கண் வைத்தாய். அவன் எரித்தது முப்புறம் என்ரு ய், அவன் தேவியும் திரிபுர சுந்தரியே, மொழியையும் முத்தமிழாக வகுத்தாய் எழுத்திலும் மூன்று இனமே பிரித்தாய் எழுத்து, சொல், பொருள் அதிகாரமென உன் தொல் காப்பியமும் மூன்றுடைத்தே திருக்குறளும் முப்பாலுக்கு அப்பாலில்லே பெமைக்குரிய பேரிலக்கியமான சிலம்பும் பூம்புகார் மதுரை வஞ்சிக் காண்டமே உன்னுள் ஒடும் நாடியும் மூன்று. கொண்டு நடத்தும் குணமும் மூன்று. ஐம்பெருங் காப்பியத்தில் இரண்டை இழந்தது மூன்றில் உனக்குள்ள மோகமோ அறியேன் வள்ளுவன், இளங்கோ, கம்பனென்று மூவரையே பாரதியும் பாராட்டிச் சொன்னன் முத்தமிழ், முத்தமிழ் என முழங்கும் தமிழா தொல் காப்பியத்திலிருந்து ஆத்திச்சூடி வரை பத்துப் பாட்டு, எட்டுத்தொகை பதினென் கீழ்க்கணக்கு காப்பிய, காவிய இதிகாச புராணங்கள் இயற்றமிழுக்கு உண்டு தேவாரத் திருவாசகத் திருவிசைப் பாக்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/81&oldid=781740" இலிருந்து மீள்விக்கப்பட்டது