பக்கம்:நாடகங்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 உன் மன்னவன் எங்கள் தென்னவன் புகழ் வளருது, வளருது அம்மா... அவன் ஆசைக்கோர் அளவில்லை...உன்மேல், இந்த மண்மேல், இப்போது விண்மேலும் சென்றுவிட்டதம்மா. வேள்விக்கு நாள் குறித்தான். வெற்றிக்கே போர் குறித்தான். ராணி : இதெல்லாம் தெரிந்த கதைதானே ! குற : தெரிந்தாலும் தெரியாத கதை ஒன்று உண்டு பெண்னே, உன் கணவன் கரத்திலே வாள். களத்திலே வெற்றி. எத்தனைதான் பெற்ருலும், நீ என்ன பெற்றவளா? பேர் சொல்ல ஒர் பிள்ளையைப் பெற்றவளா? செதுக்கிவைத்த உன் ேெயிலெல்லாம் யாழி இருக்கு. செதுக்காத விலேயே! உன் காத்திலே மழ லே சிந் த ஒரு குழந்தை, யாங்கே? ன் கனவ ன் மல்லாண்ட திண்தோளில் மனியாரம் ஆயிரம் புரண்டாலும், ஒரு பிஞ்சக்கயத்தின் சுகம் அவன் கண்டதுண்டா? இந்தக்குறை விர என்ன தவம் செய்தாய் பெண்ணே! என்ன தவம் செய்தாய்! பதவிக்கு அவன் 100 வேள்வி பண்ணிலுைம் இந்த பிறவிக்கு என்ன சொல்லம்மா சொல்! (அரசிக்கு அவள் சொல்லிக்காட்டக் காட்ட, உள்ளம் வெதும்புகிறது.) தோழி போதும் உன் புலம்பலை நிறுத்து! குறம்பாடுன்னு கூப்பிட்டா, அவங்க மனம்நோக பேசிட்டியே... குற உள்ளதைத்தான் சொன்னேன். நல்லதைத்தான் சொல்வேன். அரசி : பிள்ளைக்கலிதீர என்ன பரிகாரம்? அதைச்சொல். குற : தீர்த்தயாத்திரைபோல்ை தீருமம்மா இந்தக்குறை! மனக்குறையுன்ள நீ யாக பத்தினி ஆகமுடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/85&oldid=781748" இலிருந்து மீள்விக்கப்பட்டது