பக்கம்:நாடகங்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 5 பரீனவப்பெண் ஆட்டத்தின் முடிவில் மன்னவன் முன்னிலையில் தன் இடையில் சொருகியிருந்த பையை எடுத்து, முத்துக்களை காணிக்கையாக செலுத்துகிருள். மற்ற மற்ற மீனவர் களும் கடல்படு பொருள்களை தங்கள் காவலனுக்குக் காணிக்கை பாக வைக்கின்றனர். சேதுகாவலன் பெரிய மலர் மாலைகளைச் சூட்டுகிருன். சேதுகாவலன் : தென்னவர் தலைவா, தென் பாண்டி அன்னையே! உங்கள் பொன்னுர் திருவடிகட்கு வணக்கம். இந்த சேதுக்கரை செய்த புண்ணியம்,அரசனும் அரசியும் இங்கே காட்சி தந்திருக்கிறீர்கள். வேங்கடத்தைத் தமிழால் அளந்து, இமயத்தை வாளால் அளந்து, வானத்தை அஸ்வமேத யாகத்தால் அளந்து, இந்திர பதவியை அளந்து கொண்டிருக்கிற ஏந்தலே, உங்கள் பெருமைக்கு எல்லையில்லை. இந்தக் கடலை உவமை சொல்லலாம். சொன்னுல் அது கரிக்கும். உங்கள் கருனே அவ்வளவு இனிமையானது. இமயத்தைச் சொன்னல் அதன் உச்சிக்கும் எல்லையுண்டு. உங்கள் புகழ் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. நீங்கள் தேவர்க்கும் தேவர். திருமாலுக்கும் நிகர் ஆனவர். (அரசன் கையமர்த்துகிருன். சேதுகாவலர் இடையில் பேச்சை நிறுத்துகிரு.ர். அரசன் சேதுகாவலனைப் பார்த்து) அரசன் : சேது காவலரே! நான் புகழுக்கு சுமைதாங்கியல்ல. என் ஆற்றலின் அளவு எனக்குத்தெரியும். எங்கே அலை அருகே ஒரு ஆசனமிடுங்கள். என்று சொல்லிவிட்டு அரசன் எழுந்து அலேயருகே செல்லுகிருன். அனைவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/90&oldid=781760" இலிருந்து மீள்விக்கப்பட்டது