பக்கம்:நாடகங்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 அரான் : சேதுகாவலரே, என் உத்தரவுக்கு இந்த உப்புக் கடல் ஒசை அடங்கமறுக்கிறது. அரசர்க்கும் அரசன் என்று மதிக்காமல் என் ஆடைகளையும் நனைத்து விட்டது. தெரிந்துகொள்ளுங்கள், மனிதனின் ஆற்ற லுக்கு எல்லையுண்டு. இயற்கையை அவன் வெல்ல முடியாது. அதை அனுசரித்து பயன்படுத்திக்கொள்ள லாம். அது மிஞ்சில்ை இவன் மிஞ்சமாட்டான். வர்ணித்து வர்ணித்து மனிதனை தெய்வமாக்க நினைக் காதீர்கள். அவனுக்கு மரணமுண்டு. உங்கள் பாராட்டுக்கு நன்றி. பிள்ளைக்கலிதிர நாங்கள் புனித நீராட்டத்துக்குத்தான் வந்தோம். (என்று கூறி முடிக்கிருன்.I கடல் நோக்கி அரசனும் அரசியும் சென்று நீராடுகிரு.ர்கள், i காட்சி எண். 8 ஆலயம் அரசனும் அரசியும் ஆலயத்துக்குச் செல் கிரு.ர்கள். பூரண கும்ப மரியாதை யுடன் வேத பாராயனம் செய்கின்றனர். ஒருபுறம் நாதஸ்வர இன்னிசை பின்னணி செய்கிறது. திபஆராதனை நடத்துகின்றனர். அந்த ஆடம்பரமான சூழ்நிலையை அரசன் விரும்பவில்லை. அரசன் அரசியிடம் மெது வாகச்சொல்கிருன். அரசன் : தேவி, இப்படி நாம் பரிவாரம் புடைசூழ புறப்பட்டால் பக்தியும் புண்ணியமும் நமக்குக் கிட்டாது. வரவேற்பும் வைபவமும்தான் நடக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/92&oldid=781766" இலிருந்து மீள்விக்கப்பட்டது