பக்கம்:நாடகங்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 என்பர். தயை என்ருல் கருணை என்பார். ஈரமும் கருனேயும் எங்கேயம்மா? எங்கேயம்மா... அரசி அர்ச்சனை செய்து கொண்டே போகிருள். அர்ச்சனை பாட்டாகிறது. அந்தப் பாட்டுக்கிடையில் ஒரு சின்னஞ்சிறு பெண் குழந்தை பந்தல் காலைப்பற்றிக் கொண்டு வந்து நிற்கிறது, காவல் நின்ற தோழியர் அந்தக் குழந்தை யாரென்று புரியாமல் ஒருத்தியை ஒருத்தி பார்த்துக் கொள்கிருர்கள். அவர்களில் ஒருத்தி: அந்தக் குழந்தையை மெல்ல இழுத்து அப்பால் விடப்போகிருள். குழந்தை அரசியின் மடியில் போய்" "உட்கர்ர்ந்து கொள்கிறது. அவர்களை பார்த்துப் செல்ல மாக சிரிப்பு காட்டுகிறது. அரசிக்கும் அந்தக் குழந்தை யாரென்று புரியவில்லை. அவளால் அகற்றவும் முடிய வில்லை. அவள்மனம் அந்தப் பிள்ளை மேல் செல்கிறது. கைகள் பூப்போட தடுமாறுகின்றன. குழந்தை பூஜை' மலரை கைநிறைய அள்ளுகிறது. அரசி மலர்களே அதன் இடமிருந்து வாங்க முயற்சிக்கிருள், அது அவள் மடியில் இருந்து நழுவி ஒடுகிறது. அவளும் பூசையை மறந்து அந்தப் பிள்னேயைத் தொடர்ந்து ஓடுகிருள். பரிவாரங் களும் அரசியைத் தொடர்ந்து வருகின்றன. காட்சி எண் 13 ஒரு கோயில் வாசல் கொஞ்ச துாரத்திற்கு அப்பாலிருந்த பெரிய கோவிலுக்குள் குழந்தை சென்று விடுகிறது, அரசி தேடுகிருள். அதை அங்கே காணவில்லை. திகைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/98&oldid=781778" இலிருந்து மீள்விக்கப்பட்டது