பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1

நாடகப்

பாத்திரங்கள்

‘ராஜ ராஜ மகாராஜன் அரிச்சந்திரன் வந்தானே! .....’ வானொலியை மூடி விடாதீர்கள். நான் பாட வரவில்லை; பேசப் போகிறேன். நாடகப் பாத்திரங்கள் மேடைக்கு வரும்போது இப்படித்தான் பாடித் தங்களை விளம்பரப் படுத்திக் கொள்வார்கள் முன்பு. இப்போது அதெல்லாமில்லை. பேச்சு, கடிப்பு, கதை நிகழ்ச்சிகள் இவைகளே பாத்திரங்களை அறிமுகப்படுத்துகின்றன.

உயிர்ப் பாத்திரங்கள்

பாத்திரங்கள் என்றவுடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? அதே நினைவுதான் எனக்கும்; வேறென்ன? நம் பெண் தெய்வங்கள் பார்க்கும்போது எல்லாம் வாங்கி வைக்க விரும்பும் சமையல் பாத்திரங்கள்தாம் அந்தப் பெயர் நாடகத்தில் ஏன் வந்தது? சிறிது சிந்திப்போமா?

மண், பித்தளை, செம்பு, ஈயம், வெண்கலம், வெள்ளி, இப்போது ஏகாதிபத்யம் செலுத்தும ‘எவர்சில்வர்’, இப்படிப் பல பாத்திரங்களை உங்களுக்குத் தெரியுமே! அதுபோல்தான் நாடகத்திலும் பல பாத்திரங்களைப்