பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100


தொண்டு செய்பவன். பொது மக்கள் போக்கில் பணி புரிவது எளிது. தன்வழிக்குப் பொதுமக்களை ஈர்ப்பது கடினம். ஆனால், கலைஞன் இரண்டாவது வழியையே கடைப்பிடிகக வேண்டும். கலைஞன் காட்டும் இந்தப் பாதையில மக்களைத் தூண்டுவதற்கு அறிஞர் பெரு மககளும்,பத்திரிகையாளர்களும் துணைபுரியவேண்டும். இவர்களின் கூட்டு முயற்சியால் உண்மையின் பக்கம் மககள் ஆதரவு என்றென்றும் நிலைபெற்றிருக்கும் என் பதில் சிறிதும் ஐயமில்லை.

மனிதப் பண்பை வளர்ப்பவனே கலைஞன்

கலைஞர்களுக்குப் பொது மக்களோடு நெருங்கிய தொடர்பு இருக்கவேண்டும். அவர்களின் சுவையுணர் வினை அறிந்து தன்னலத்திற்கு அதனைப் பயன்படுத் திக் கொளவதற்கலல. அவர்கள வாழ்வுக்கு நல்ல வழி காட்டி, மனிதப் பண்பினை வளர்த்துச் சமுதாயத்தின் தொண்டாகளாக்குவதற்காக பொருள் சேர்க்கும் கோக் குடன பொதுமக்கள் தொடர்பு வேண்டாம். புன்மை யைக் களையும் கோககோடு தொடாபு கொள்வோம.

கஜலஞன் தன்னைத் தாயாகவும் காட்டு மக்களைத் தன் குழந்தைகளாகவும் மதிக்கவேண்டும். ஒரு தாய் எப்படித்தன் குழந்தைகளுக்கு கல்லவைகளைத் தெரிந்து ஊட்டுவாளோ, அப்படியே கலைஞனும் கல்லவைகளையே மக்களுக்குப் புகட்டக் கடமைப்பட்டிருக்கிருன்.

- கலைக்கதிர் பொங்கல் மலர்

197 Ꮽ