பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2


பார்க்கலாம். ஆனல் நாடகப் பாத்திரங்கள் உயிர்ப் பாத்திரங்கள்.

குழம்பு, ரசம், கூடடு, அவியல், பச்சடி இபபடிப் பல பதாாத்தங்களைப் பாத்திரங்களில் வைக்கிறார்கள் கம் தாய்மார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சுவை. இனிப்பு, கைப்பு, புளிப்பு இப்படி அறுசுவை என்று சொல்கிறார்களே!...மனிதப் பாத்திரங்களிலும் அபபடித் தான். பலமாதிரிக் குணச சித்திரங்களைத் தயாரிப் பதற்கு, சிந்தனை, பேன, காகிதம் இவை போதும்.

அடுக்களைப் பாத்திரமும் அரங்கின் பாத்திரமும்

மகாத்மா காந்தியடிகள், மக்களின் அன்புக்குப் பாத்திரமானர் என்கிருேம். அன்புக்குத் தகுதியான பாததிரமாக, காந்தியடிகள விளங்கினர். பண்டிதர் நேரு உலகத்தின் புகழுக்குப் பாத்திரமானுர் என் கிருேம். புகழுக்குத் தகுதியான பாத்திரமாக நேரு அவர்கள் விளங்கினர். பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்பது பழமொழி. காரியம் செய்யுமுன், அந்த மனிதப் பாத்தி ரத்தின் தகுதியைத் தெரிந்துகொள் என்பதுதான் அதன் கருத்து.

வெவ்வேறு பதார்த்தங்களை கிறைத்து வைக்கும் பாண்டத்திற்குப் பாத்திரம் என்று பெயர். வெவ்வேறு குணங்களை நிரப்பி வைக்கும் மனித உருவத்திற்கும் அந்தப் பெயரையே வைத்தான் ஆசிரியன்.

சமையல் பாத்திரங்களில் தாய்மார்கள் தரும் உணவு, உடலுக்கு நாடகப் பாத்திரங்களில் ஆசிரியன் தரும் உணவு உணர்வுக்கு-அறிவுக்கு.